• August 5, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: சென்னையில் தற்​போது நடை​பெற்​று​வரும் மெட்ரோ ரயில் பணி​களில் கலங்​கரை விளக்​கம் – பூந்​தமல்லி வரையி​லான (26.1 கி.மீ.) 4-வது வழித்​தடத்​தில் 9 சுரங்க மெட்ரோ ரயில் நிலை​யங்​களும், 18 உயர்​மட்ட மெட்ரோ ரயில் நிலை​யங்​களும் இடம்​பெறுகின்​றன. இப்​பாதை​யில் கலங்​கரை விளக்​கம் மெட்ரோ ரயில் நிலை​யத்​திலிருந்து முதல் சுரங்​கம் தோண்​டும் இயந்​திர​மான ‘ஃபிளமிங்​கோ’, 2-வது சுரங்​கம் தோண்​டும் இயந்​திர​மான ‘ஈகிள்’ ஆகியவை அடுத்​தடுத்து சுரங்​கம் தோண்​டும் பணியை தொடங்கின.

இந்த இயந்​திரங்​களில் ஃபிளமிங்கோ இயந்​திரம் தற்​போது கச்​சேரி சாலையை கடந்​து, திரு​ம​யிலை​யில் இருந்து சுமார் 300 மீட்​டர் தொலை​விலும், மற்​றொரு இயந்​திர​மான ஈகிள் திரு​ம​யிலை​யில் இருந்து 500 மீட்​டருக்கு அப்​பாலும் உள்​ளன. இந்​நிலை​யில் இந்த 2 சுரங்​கம் தோண்​டும் இயந்​திரங்​களும் தற்​காலிக​மாக நிறுத்​தப்​பட்​டுள்​ளன.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *