
சென்னை: முன்னாள் முதல்வர்கள் அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆய்வு மேற்கொண்டு அங்கே நடைபெற்று வரும் பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார். மெரினா கடற்கரையில் அமைந்துள்ள முன்னாள் முதல்வர்கள் அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நேற்று மலர்தூவி மரியாதை செய்தார். இதைத் தொடர்ந்து நினைவிடங்களில் நடைபெற்று வரும் பணிகளை ஆய்வு செய்தார்.
அண்ணா நினைவிடத்தில், ஸ்தூபி, சிலை புதுப்பிக்கும் பணி, புல்வெளிகளை பராமரித்தல், உடைந்துள்ள பளிங்குக் கற்களை சீரமைத்தல், தரையில் மழைநீர் தேங்காத வண்ணம் சீர் செய்யும் பணி, அண்ணா வளைவு முகப்பை தூய்மை செய்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.