• August 5, 2025
  • NewsEditor
  • 0

அமராவதி: ‘ஸ்ரீ சக்​தி’ எனும் பெயரில் வரும் 15-ம் தேதி முதல் ஆந்​திர மாநில அரசு பேருந்​துகளில் பெண்​களுக்கு இலவச பயணத் திட்​டம் அமலாக​வுள்​ளது. ஆந்​திர மாநிலம் அமராவ​தி​யில் உள்ள தலைமைச் செயல​கத்​தில் நேற்று மாநில போக்​கு​வரத்து துறை அமைச்​சர் எம். ராம்​ பிர​சாத் ரெட்டி தலை​மை​யில் அதி​காரி​களின் ஆலோ​சனை கூட்​டம் நடை​பெற்​றது. இதில் வரும் 15-ம் தேதி முதல் அமல்​படுத்​தப்​போகும் பெண்​களுக்​கான இலவச பேருந்து பயணத் திட்​டம் குறித்து விரி​வாக விவா​திக்​கப்​பட்​டது.

அதன் பின்​னர், செய்​தி​யாளர்​களிடம் அமைச்​சர் எம். ராம்​ பிர​சாத் ரெட்டி கூறிய​தாவது: சுதந்​திர தின​மான வரும் 15-ம் தேதி முதல், தேர்​தலில் கொடுத்த முக்​கிய வாக்​குறு​தி​களில் ஒன்​றான பெண்​களுக்​கான இலவச பேருந்து பயணத் திட்​டம் அமல் படுத்​தப்பட உள்​ளது. இதற்கு முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு ‘ஸ்ரீ சக்​தி’ என பெயரிட்​டுள்​ளார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *