
புதுடெல்லி: ஐந்து நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ள பிலிப்பைன்ஸ் அதிபர் ஃபெர்டினாண்ட் ரொமுவால்டெஸ் மார்கோஸ் ஜூனியர், பிரதமர் நரேந்திர மோடியை நாளை சந்திக்க உள்ளார்.
மனைவி லூயிஸ் அரனெட்டா மார்கோஸ், அமைச்சர்கள் உள்ளிட்ட உயர்மட்டக் குழுவினருடன் புதுடெல்லி வந்தடைந்த பிலிப்பைன்ஸ் அதிபரை, வெளியுறவுத்துறை இணை அமைச்சர் பபித்ரா மார்கெரிட்டா விமான நிலையத்திற்குச் சென்று வரவேற்றார். விமான நிலையத்தில் பாதுகாப்புப் படையினரின் அணிவகுப்பு மரியாதையும் அவருக்கு வழங்கப்பட்டது.