
புதுச்சேரி: தனக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன நடிகர் விஜய்க்கு, "வெற்றி பெற வேண்டும்" என புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி வாழ்த்து கூறியுள்ளார்.
முதல்வர் ரங்கசாமிக்கும், விஜய்க்கும் நெருக்கமான நட்பு உண்டு. விஜய்யின் தவெக முதல் மாநில மாநாடு நடந்தபோது முதல்வர் ரங்கசாமி வாழ்த்து தெரிவித்தார். அந்த மாநாட்டை தொலைக்காட்சியில் பார்த்தார். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்தாலும் விஜய்யுடன் முதல்வர் ரங்கசாமி நெருக்கம் காட்டி வருகிறார்.