• August 4, 2025
  • NewsEditor
  • 0

திருநெல்வேலி, தியாகராஜ நகரை சேர்ந்த 14 வயது பள்ளி மாணவர் ஏ.சி. ஹரி கிருஷ்ணா.

சிறுவயதிலிருந்தே கலைமீது மிகுந்த ஆர்வம் கொண்ட இவர், கிட்டத்தட்ட ஏழு வருடங்களாக சிவராம் கலைக்கூடத்தில் கலை பயின்று வருகிறார்.

இந்த நிலையில் ஹரி கிருஷ்ணா தனது முயற்சியால், விக்ரம் சாராபாய், கல்பனா சாவ்லா, ஆரியபட்டா, கணித மேதை ஸ்ரீனிவாச ராமானுஜன், அப்துல் கலாம் ஆகியோர் என 101 இந்திய விஞ்ஞானிகளை வரைந்து அசத்தியிருக்கிறார்.

இவருடைய ஓவியங்களை, திருநெல்வேலி மாவட்ட அறிவியல் மையம் மற்றும் சிவராம் கலைக்கூடம் இணைந்து, ஆகஸ்ட் 2, 3 தேதிகளில் ஒரு தனி கலைக் கண்காட்சியாக நடத்தியது.

ஹரி கிருஷ்ணன் வரைந்த ஓவியங்கள்

இந்தக் கண்காட்சியின்போது, தன்னுடைய கலைப் பயணம் குறித்து பகிர்ந்து கொண்ட ஹரிகிருஷ்ணா, “நான் புஷ்பலதா வித்யாலயா சி.பி.எஸ்.சி ஸ்கூல்ல படிக்றேன்.

மூன்றாம் வகுப்பிலிருந்து வரைய ஆரம்பிச்சேன். கிட்டத்தட்ட ஏழு வருஷமா சிவராம் கலைக் கூடத்தில்தான் இந்தக் கலையை கற்றுக் கொண்டிருக்கிறேன்.

என்னுடைய எதிர்கால கனவே, ராக்கெட் சயின்டிஸ்ட் அல்லது சாட்டிலைட் இன்ஜினியர் ஆகணும் இன்றதுதான்.

அந்த இன்ஸ்பிரேஷன்லதான் 101 சயின்டிஸ்ட்களை வரைஞ்சேன்

எந்தவொரு ட்ராயிங் போட்டி வந்தாலும் அதுல கலந்துக்கோனு என்னோட சிவராம் கலைக்கூட டீச்சர்ஸ், ஃப்ரண்ட்ஸ், ஃபேமிலி மெம்பர்ஸ் எல்லோருமே ரொம்ப சப்போர்ட்டிவா இருப்பாங்க.

என்னுடைய இந்தப் பயணத்தை இப்போதான் நான் ஸ்டார்ட் தான் பண்ணிருக்கேன். இன்னும் தொடர்ந்து போகணும்.

சயின்ஸ்ல இன்ட்ரஸ்ட் இருக்கிறதால ஸ்பேஸ் அண்ட் டிஃபன்ஸ்ல இருந்து ஸ்டார்ட் பண்ணுவோம்னு, விக்ரம் சாராபாய்தான் ஃபர்ஸ்ட் வரைஞ்சேன்.

இந்த 101 ஒரு படங்களையுமே சார்கோல் ஷேடிங்ல தான் வரைஞ்சிருக்கேன். பெயிண்டிங்ல இன்னும் நிறைய கான்சன்ட்ரேட் பண்ணனும்னு நினைக்கிறேன்.

101 படங்களை வரைய 8 மாசம் ஆச்சு. ஒரு படத்துக்கு 4 நாள் டைம் எடுத்துப்பேன்.

படிப்பையும் ஆர்ட்டையும் மேனேஜ் பண்றதுக்கு, ட்ராயிங்காக மட்டும் ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் டைம் ஸ்பென்ட் பண்ணுவேன்.

ஒரு படத்தை பாத்துட்டு அதுக்கப்றம் அதுல இருக்ற மாதிரியே இல்லாம இன்னும் எவ்வளவு தூரம் அழகா கொண்டு வர முடியுமோ அவ்ளோ தூரம் பிளான் பண்ணிதான் ஒரு ஆர்ட்டை ஆரம்பிப்பேன்“ என்று கூறினார்.

ஹரி கிருஷ்ணன் வரைந்த ஓவியங்கள்
ஹரி கிருஷ்ணன் வரைந்த ஓவியங்கள்

மேலும், ஏன் 101 சயின்டிஸ்டோடு முடித்துவிட்டீர்கள் என்று கேட்டபோது, “நான் வரைஞ்ச 101 சயின்டிஸ்டுமே இந்தியன் சயின்டிஸ்ட்.

இன்ஃபர்மேட்டிவா இருக்கணும் இன்றதுக்காக அவர்களைப் பற்றி படத்துக்கு கீழவே எழுதியிருக்கேன்.

பத்தாவது போறதுதால இதோட நிப்பாட்டி இருக்கேன். இல்லன்னா இன்னும் வரைஞ்சிருப்பேன்.

எஜுகேஷனயும் நம்ம பேஷனையும் சமமா கொண்டு போகனும், நிறைய எக்ஸ்பிளோர் பண்ணனும் இன்றதுதான் எல்லாருக்கும் நான் சொல்ல நினைக்கிறேன்” என்றும் கூறினார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *