
சிவகாசி: ஆடிப்பெருக்கையொட்டி சிவகாசியில் உள்ள அச்சகங்களில் சிறப்பு பூஜை செய்யப்பட்டு 2026-ம் ஆண்டுக்கான காலண்டர் ஆல்பம் வெளியிடப்பட்டது.
சட்டப்பேரவை தேர்தல் வர உள்ளதால் அரசியல் கட்சிகளின் ஆர்டர்கள் அதிகம் வருவதால் உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சிவகாசியில் பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிலுக்கு அடுத்தபடியாக அச்சுத்தொழில் பிரதானமாக உள்ளது. சிவகாசியில் உள்ள 150-க்கும் அதிகமான அச்சகங்களில் நோட்டுப் புத்தகங்கள், டைரிகள், காலண்டர்கள் ஆகியவை தயாரிக்கப்படுகின்றன. இதில் 50-க்கும் அதிகமான அச்சகங்கள் பிரத்யேகமாக காலண்டர் தயாரிப்பில் மட்டும் ஈடுபட்டுள்ளன.