
சென்னை: அதிமுக தொண்டர்கள் மக்களுடன் உறுதியாக நின்று, வீடு வீடாகச் சென்று அவர்களின் குறைகளையும் கோரிக்கைகளையும் கேட்டறிந்து தலைமைக் கழகத்திடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.
சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘பெயிலியர் மாடல் ஸ்டாலின் அரசை’ அகற்ற “மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்" என்ற எனது எழுச்சிப் பயணத்திற்கு, ஏகோபித்த ஆதரவைத் தொடர்ந்து வழங்கி வரும் தமிழக மக்களுக்கு, எனது மனமார்ந்த நன்றிகள்.