
புதுச்சேரி: விநாயகர் சதுர்த்தியை ஒட்டி புதுச்சேரி, காரைக்காலில் 500-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் வைக்கப்படவுள்ளன. இந்த ஆண்டு விழாவானது, புதுச்சேரியில் உள்ள அனைத்து ஆலயங்களையும் பாதுகாக்கவும் மேம்படுத்தவும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக "நம்ம சாமி நம்ம கோவில் நாமே பாதுகாப்போம்" என்னும் பெயரில் கொண்டாடப்பட இருக்கிறது.
விநாயகர் சதுர்த்தி விழாவை சிறப்பாக நடத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் புதுச்சேரி வெங்கடா நகர் தமிழ்ச் சங்கத்தில் இன்று நடந்தது. இக்கூட்டத்துக்கு விநாயகர் சதுர்த்தி விழா பேரவை தலைவர் குமரகுரு தலைமை வகித்தார். பொதுச்செயலர் சனில்குமார் முன்னிலை வகித்தார். துணைத் தலைவர்கள் பசுபதி, நாகமணி, துளசி மதிவாணன், ஸ்ரீதரன், பொருளாளர் செந்தில் முருகன், செயலாளர்கள் சோழன், ராஜேஷ் ஆகியோர் பங்கேற்றார்கள்.