
தேர்தல் நெருங்கும் சூழலில் தமிழக அரசியலில் பல மாற்றங்கள் நடைபெற்று வருகின்றான. அதிமுக மீண்டும் பாஜகவுடன் கூட்டணி வைப்பதில் ஆதிமுகவினர் சிலருக்கே விருப்பம் இல்லை எனக் கூறப்பட்டுவந்தது.
அந்த வகையில் அதிமுக சீனியர் தலைவர் ஜெயக்குமார் அந்தக் கட்சியிலிருந்து விலகி திமுகவில் இணையப்போவதாக செய்திகள் பரவின. இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் முன்னாள் சபாநாய்கர் ஜெயக்குமார்.
சென்னையில் இன்று (ஆகஸ்ட் 3) செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், “என்னைப் பற்றி கூட வதந்தி பரப்புகிறார்கள். என்னால் ஒரு யூடியூபர் ஒரு மீடியாவுக்கு வருமானம் வந்தால் மகிழ்ச்சிதான். தினமும் லைம் லைட்டில் இருக்கணும்.
(திமுகவில் இணைவது) நடக்காத ஒரு விஷயம். ஸ்டாலினுக்குத் தெரியும் நான் மானஸ்தன் என்று. யார் வீட்டு முன்னாடியும் பதவிக்காக நின்ன ஆள் ஜெயக்குமார் கிடையாது. நாங்கள் திராவிட பாரம்பரியத்தில் பெரியார் வழியில் அண்ணா வழியில் வந்தவர்கள். அண்ணாவுக்குப் பிறகு எம்.ஜி.ஆர். காலம்காலமாக ஓடுவது அண்ணா திமுக ரத்தம்தான். உடல் மண்ணுக்கு உயிர் அஇஅதிமுகவுக்கு” எனப் பேசினார்.