
கொல்கத்தாவில் இருந்து சென்னை வந்து கொண்டிருந்த விமானத்தில் பயணி ஒருவருக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டதால், மருத்துவ சிகிச்சைக்காக குறிப்பிட்ட நேரத்துக்கு முன்னதாகவே விமானி விமானத்தை சென்னையில் தரையிறக்கினார்.
கொல்கத்தாவில் இருந்து நேற்று அதிகாலை 5.05 மணிக்கு சென்னைக்கு 170 பயணிகளுடன் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்டது. அந்த விமானம் காலை 7.25 மணிக்கு சென்னையில் தரையிறங்க வேண்டும். விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது, விமானத்தில் இருந்த பயணி ஒருவருக்கு, திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது.