
சென்னை: முன்னாள் முதல்வரும் மறைந்த திமுக தலைவருமான கருணாநிதியின் நினைவுநாளான ஆக. 7 அன்று சென்னையில் அவரது நினைவிடம் நோக்கி நடைபெற உள்ள அமைதி பேரணியில் தொண்டர்கள் கடலென திரள மு.க. ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.
இது தொடர்பாக திமுக தொண்டர்களுக்கு ஸ்டாலின் எழுதியுள்ள கடிதம்: "நெடுநாள் கழித்து, உங்களுடன் இந்த மடல் வாயிலாக உரையாடுகிறேன். காரணம், சில நாட்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டும் – வீட்டில் ஓய்வெடுத்தும் வந்தேன். சிகிச்சை – ஓய்வு என்று சொன்னாலும், மருத்துவமனையில் இருந்தபடியே அரசு அலுவல்களையும் கழகப் பணிகளையும் செய்துகொண்டுதான் இருந்தேன்.