
சென்னை: ‘பிஹாரில் 65 லட்சம் வாக்காளர்கள் வாக்குரிமை இழக்கும் அபாயத்தில் இருக்கும் அதே வேளையில், தமிழ்நாட்டில் 6.5 லட்சம் பேரை வாக்காளர்களாக சேர்ப்பது பற்றிய தகவல்கள் ஆபத்தானவை மற்றும் சட்டவிரோதமானவை" என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் கூறினார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘ பிஹாரின் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் திகைப்பூட்டுவதாக மாறி வருகிறது.