
சிம்லா: இமாச்சல பிரதேசத்தில் 26 ஆண்டுகளுக்கு பிறகு லாட்டரியை மீண்டும் அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இமாச்சல பிரதேசத்தில் கடந்த 1999-ல் பிரேம் குமார் துமால் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் லாட்டரிக்கு தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற மாநில அமைச்சரவை கூட்டத்தில் லாட்டரியை மீண்டும் அறிமுகப்படுத்த முடிவு செய்யப்பட்டது. மாநிலத்தின் வருவாயை பெருக்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.