• August 3, 2025
  • NewsEditor
  • 0

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் கொல்​கத்​தா​வில் விமானப் போக்​கு​வரத்து நிறு​வனம் ஒன்​றில் பணி​யாற்றி வந்​தவர் சாந்தா பால். பகுதி நேர​மாக மாடலிங் தொழிலிலும் ஈடு​பட்டு வந்​தார். இந்​நிலை​யில் போலி ஆவணங்​களை பயன்​படுத்தி இந்​தி​யா​வில் வசித்து வந்​த​தாக இவரை கடந்த செவ்​வாய்க்​கிழமை போலீ​ஸார் கைது செய்​தனர்.

இதுகுறித்து போலீஸ் அதி​காரி ஒரு​வர் கூறிய​தாவது: சாந்தா பால், கடந்த 2016-ல் ஆண்டு இந்தியா – வங்​கதேசம் இடையி​லான அழகிப் போட்​டியல் வங்​கதேசம் சார்​பில் பங்​கேற்​றார். 2019-ல் இவர் ஆசிய அழகிப் போட்​டி​யிலும் பங்​கேற்​றுள்​ளார். மாடலிங் துறை​யில் வெற்​றியை தொடர்ந்​து, அவர் நடிப்புத் தொழிலுக்கு மாறினார். இறு​தி​யில் வங்​கதேச விமான நிறு​வனம் ஒன்​றில் சேர்ந்​தார். இவர், கடந்த 2023-ல் வங்​கதேசத்​தின் பாரி​சாலில் இருந்து அந்​நாட்டு பாஸ்​போர்ட் மூலம் இந்​தியா வந்​தார். கொல்​கத்​தா​வில் ஒரு சொத்து முகவர் மூலம் அடுக்​கு​மாடி குடி​யிருப்பை வாடகைக்கு எடுத்​தார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *