
லோகேஷ் கனராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் ‘கூலி’ திரைப்படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் பிரமாண்டமான முறையில் இன்று நடைபெற்றது.
ஆமீர் கான், நாகர்ஜூனா, செளபின் சாஹிர் எனப் படத்தின் முக்கிய நடிகர்கள் அனைவரும் இந்த நிகழ்வுக்கு வந்திருக்கிறார்கள்.
இந்த நிகழ்வில் நடிகர் நாகர்ஜூனா பேசுகையில், ” ஒரு ‘கூலி’ திரைப்படம், 100 ‘பாட்ஷா’ திரைப்படங்களுக்கு சமமானது.
நான் படத்தில் ‘சைமன்’ என்கிற வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன்.
ஓஜி சூப்பர் ஸ்டார் என்பது ரஜினி சார் மட்டுமேதான்.” எனப் பேசினார்.

நடிகர் உபேந்திரா பேசும்போது, ” ஹாலிவுட், பாலிவுட், கோலிவுட், டோலிவுட், சாண்டில் வுட் என பல திரையுலகங்களில் எண்ணற்ற நட்சத்திரங்கள் இருக்கலாம். ஆனால் அந்த நட்சத்திரங்களும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் முதல் நாள் முதல் காட்சிக்காக ஆவலுடன் காத்திருக்கிறார்கள். அதுதான் சூப்பர் ஸ்டார்!” எனக் கூறினார்.