
மேட்டூர்: தீரன் சின்னமலை நினைவு தினம், ஆடிப்பெருக்கை முன்னிட்டு, சேலம் மாவட்டம் முழுவதும் 700 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈட்டுள்ளனர் என எஸ்.பி கௌதம் கோயல் தெரிவித்துள்ளார்.
ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மேட்டூர், பூலாம்பட்டி உள்ளிட்ட பகுதியில் காவிரி ஆற்றில் புனித நீராட ஆயிரக்கணக்கான பக்தர்களும் சுற்றுலா பயணிகளும் வருவார்கள். அதன்படி, அணையின் அடிவாரமான மட்டம் பகுதி , காவிரி பாலம் படித்துறை பகுதியில் குளிப்பதற்கு மட்டுமே பொது மக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. காவிரி ஆற்றில் வினாடிக்கு 16 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுவதால் ஆழமான பகுதியில் குளிப்பதற்கு பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.