
2008-ம் ஆண்டுமுதல் நடந்து வரும் ஐபிஎல் தொடரில் முதல் முறையாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இந்த ஆண்டு (ஐபிஎல்-2025) தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது.
ஒரே அணிக்காக இத்தனை ஆண்டுகள் விளையாடி, பெங்களூரு அணி வெற்றி பெற்ற போது மைதானத்தில் கண்கலங்கி அழுதபடி தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருந்தார் விராட் கோலி. அந்த வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலானது.
ஆனால், விராட் கோலி மகிழ்ச்சியில் மட்டுமல்ல, ஒரு தோல்வி நடந்தபோது மிகுந்த மனவேதனையில் விராட் கோலி அழுதார் என இந்தியச் சுழற்பந்து வீச்சாளரான யுஸ்வேந்திர சாஹல் தன் அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார்.
சமீபத்தில் அவர் அளித்திருக்கும் ஒரு பேட்டியில், “கடந்த 2019-ம் ஆண்டு மான்செஸ்டர் நகரில் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் அரையிறுதிப் போட்டி நடந்தது. நியூசிலாந்து அணியை எதிர்த்து நாங்கள் விளையாடினோம்.
அப்போது ஒரு கட்டத்தில் இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 240 ரன்கள் அடிக்க முடியாமல் 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைச் சந்தித்தது. அந்தப் போட்டியின் போது இந்திய அணியில் இடம் பெற்றிருந்த அனைத்து வீரர்களுமே கண்கலங்கியபடி இருந்தனர்.
அதிலும் கேப்டன் விராட் கோலி அந்தத் தோல்வியைத் தாங்காமல் பாத்ரூமிற்குச் சென்று அழுததை நான் நேரில் பார்த்தேன். அப்படி அவர் கலங்கியபடி நின்றது மிக வருத்தமாக இருந்தது” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…