
2018 ஆம் ஆண்டு ஸ்பானிஷ் மொழியில் வெளியான சாம்பியன்ஸ் என்ற படம், இந்தியில் ‘சித்தாரே சமீன் பர் (Sitaare Zameen Par)’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு திரையரங்குகளில் வெளியானது.
மூளை வளர்ச்சி சவால் உடைய கூடைப்பந்து வீரர்களின் பயிற்சியாளராக ஆமீர் கான் நடித்திருக்கிறார். கடந்த ஜூன் 20-ம் தேதி இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிப் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது.
தற்போது இப்படத்தை ஆமீர் கான், யூடியூப்பில் வெளியிட்டிருக்கிறார்.
#AamirKhan returns to Kunariya village, Bhuj, 25 years after #Lagaan, this time for a special screening of his new hit #SitareZameenPar with local school kids.
This heartfelt event is part of his “Janta Ka Theater” initiative—making cinema accessible for all, especially… pic.twitter.com/KM5QOlUCHM
— Ashwani kumar (@BorntobeAshwani) August 1, 2025
இப்படத்தை எல்லோரிடமும் கொண்டு சேர்க்க வேண்டும் என குஜராத்தில் இருக்கும் கிராமம் ஒன்றில் ‘சித்தாரே சமீன் பர்’ திரையிட்டிருக்கிறார் ஆமீர் கான். அப்போது, கிராம மக்களுடன் சேர்ந்து படம் பார்த்த ஆமீர் கான், “சினிமாவை எல்லோரிடமும் கொண்டு சேர்க்கும் எனது கனவை நிறைவேற்ற முயற்சி செய்து வருகிறேன். இன்று இந்தக் கிராமத்தில் வெறும் ரூ.100 செலுத்தி ஒட்டு மொத்த கிராமமும் படம் பார்த்தது. நல்ல கருத்துள்ள திரைப்படம் எல்லோரிடத்திலும் கொண்டு சேர்க்க வேண்டும். எல்லோரும் பார்க்க வேண்டிய திரைப்படம் இது” என்று நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…