
71-வது தேசிய விருது நேற்று(ஆகஸ்ட் 1) அறிவிக்கப்பட்டது. இதில் சிறந்த படம், சிறந்த திரைக்கதை, சிறந்த துணை நடிகர் என ‘பார்க்கிங்’ திரைப்படம் 3 விருதுகளை வென்றிருக்கிறது.
இந்நிலையில் சிறந்த துணை நடிகருக்கான விருதை வென்றிருக்கும் எம்.எஸ். பாஸ்கருக்கு நடிகர் சாம்ஸ் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
அவர் வெளியிட்டிருக்கும் இன்ஸ்டாகிராம் பதிவில், ” சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது பெற்ற அன்பு நண்பர் M.S.பாஸ்கர் சாருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
நகைச்சுவை குணச்சித்திரம் வில்லன் என எந்த எந்தவிதமான கதாபாத்திரம் கிடைத்தாலும் அதில் ஒரு கலக்கு கலக்கக்கூடிய அற்புதமான நடிகர்.
முதல் முதலாக “சின்ன பாப்பா பெரிய பாப்பா” என்ற தொலைக்காட்சி தொடரில் அவரோடு இணைந்து நடித்தேன். அன்றிலிருந்து இன்று வரை அவரோடு இணைந்து பல படங்களில் நடித்துள்ளேன். அவருடைய நடிப்பை அருகில் இருந்து பார்த்து வியந்திருக்கிறேன்.
நேரத்தோடு சூட்டிங் ஸ்பாட்டுக்கு வருவது ,நேர்த்தியாக நடிப்பது, தான் மட்டும் ஸ்கோர் செய்து விட்டு போகாமல் அடுத்தவர்களும் சிறப்பாக நடிப்பதற்கும் உதவியாக டிப்ஸ்கள் வழங்குவது என ஒரு அர்ப்பணிப்பு உணர்வோடு நடிக்கக்கூடிய நடிகர்.

2009’ல் நாங்கள் இருவரும் சேர்ந்து நடித்த “இரும்பு கோட்டை முரட்டு சிங்கம்” படத்தில் அவர் உருவாக்கிய அந்த பழங்குடி மக்கள் பாஷையை இப்போது கேட்டாலும் சொல்லி அசத்தக்கூடிய அபார ஞாபக சக்தி கொண்டவர்.
இவர் இன்னும் பல விருதுகளை பெற்று வாழ்வாங்கு வாழ வாழ்த்தி அவர் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க இறைவனை பிரார்த்தனை செய்கிறேன்” என்று வாழ்த்தி பதிவிட்டிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…