• August 2, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: எழும்​பூர் ரயில் நிலை​யத்​தில் மறுசீரமைப்பு பணி நடை​பெற்று வரு​கிறது. இதன் காரண​மாக, எழும்​பூரிலிருந்து இயக்கப்​பட்டு வந்த 6 விரைவு ரயில்​கள் தாம்​பரத்​துக்கு மாற்​றப்​பட்​டுள்​ளன. இதனால், சார்​மி​னார் விரைவு ரயில், கடற்கரை ரயில் நிலை​யத்​துக்கு மாற்​றப்​பட்​டு, அங்​கிருந்து இயக்​கப்​படு​கிறது. இந்த ரயில் ஆக.18-ம் தேதி வரை கடற்​கரையிலிருந்து இயக்​கப்​படும் என்று அறிவிக்​கப்​பட்​டிருந்​தது.

இந்​நிலை​யில், இந்த ரயில் இந்த ஆண்டு டிசம்​பர் இறுதி வரை கடற்​கரையிலிருந்து இயக்​கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்​ளது. சார்​மி​னார் விரைவு ரயில் கடற்​கரை ரயில் நிலை​யத்​திலிருந்து மாலை 6.20 மணிக்​கும் புறப்​படும். ஐதரா​பாத்​தில் இருந்து புறப்​படும் சார்​மி​னார் விரைவு ரயில் சென்னை கடற்​கரைக்கு காலை 7.15 மணிக்கு வந்​தடை​யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *