• August 2, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: சிங்​கப்​பூரின் 60-வது தேசிய தினத்தை முன்​னிட்டு ‘சிங்கா 60’ கலைத் திரு​விழா சென்​னை​யில் நேற்று தொடங்​கியது. முதல் நாள் நிகழ்ச்​சி​யில் இடம்​பெற்ற இந்​தி​ய-சிங்​கப்​பூர் ஓவிய, சிற்​பக்​கலைஞர்​களின் படைப்​பு​கள் பார்​வை​யாளர்​களை வியக்க வைத்​தன.

சிங்​கப்​பூர் நாட்​டின் 60-வது தேசிய தினம் விரை​வில் கொண்​டாடப்பட உள்ள நிலை​யில், ‘இந்து தமிழ் திசை’, ‘தி இந்து’ மற்​றும் ‘தி இந்து பிசினஸ் லைன்’ இணைந்து சென்​னை​யில் ‘சிங்கா 60’ என்ற பிரம்​மாண்ட கலை திரு​விழாவை 10 நாட்​கள் நடத்​துகின்​றன. இசை, நாடகம், ஆவணப் ​படம், அரசி​யல், கலை, கலாச்​சா​ரம், சமையல், குழு விவாதம், கருத்​தரங்​கம் என பல்​சுவை நிகழ்ச்​சிகளை உள்​ளடக்​கிய இத்​திரு​விழா அடை​யாறு பத்​ம​நாபா நகரில் உள்ள ஃபோரம் ஆர்ட் கேலரி​யில் நேற்று கோலாகல​மாக தொடங்​கியது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *