
சென்னை: ‘வேர்களைத் தேடி’ திட்டத்தின்கீழ் 14 நாடுகளில் இருந்து தமிழகம் வந்துள்ள 99 அயலக தமிழ் இளைஞர்களின் பண்பாட்டு சுற்றுப் பயணத்தை சென்னையில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: அயலகத் தமிழ் இளைஞர்களுக்கான ‘வேர்களைத் தேடி’ என்ற கலாச்சார பரிமாற்ற சுற்றுலா திட்டத்தை சிங்கப்பூரில் கடந்த 2023-ல் நடைபெற்ற தமிழ் கலை, பண்பாட்டு நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழ் கலை, பண்பாடு, கலாச்சாரத்தை அயலக தமிழர்களிடம் பரிமாற்றம் செய்வது, புலம்பெயர்ந்து வாழும் இளைஞர்களுக்கு தமிழகத்தின் ‘மரபின் வேர்களோடு’ உள்ள தொடர்பை புதுப்பிப்பது ஆகியவையே இதன் நோக்கம்.