
-
சௌதி அரேபியாவில் உள்ள பொழுதுபோக்கு பூங்காவில் ராட்டினம் விழுந்ததில் 23 பேர் காயமடைந்தனர்.
-
கேரளா பள்ளிகளில் ஒரு மாத விடுமுறையை வெயில் காலத்துக்கு பதில் மழைக் காலத்தில் அளிப்பது குறித்து மக்களிடம் கருத்து கேட்கப்பட்டுள்ளது.
-
பேராசிரியர், கல்லூரி முதல்வர், துணை வேந்தர், கல்வியாளர் என கல்வித்துறையில் பல்வேறு முகங்களைக் கொண்ட வசந்தி தேவி இன்று காலமானார்.
-
ஓபிஎஸ் தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து வெளியேறியிருக்கும் நிலையில், “பன்னீர்செல்வத்துடன் தொலைபேசியில் பேசினேன். தொலைபேசியில் பேசிய நிலையிலும் வெளியேறும் முடிவை பன்னீர்செல்வம் எடுத்திருக்கிறார். அவர் கேட்டுக்கொண்டால் வரும் 26ம் தேதி பிரதமரைச் சந்திக்க ஏற்பாடு செய்வேன்” எனக் கூறினார் நயினார் நாகேந்திரன்.
-
“2026 தேர்தலில் திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். கூட்டணி அரசு என்ற பேச்சுக்கே இடமில்லை” என்று வைகோ பேசினார்.
-
நெல்லையில் ஆணவக் கொலை செய்யப்பட்ட கவின் செல்வகணேஷ் உடலை ஐந்து நாள் போராட்டத்துக்குப் பிறகு உறவினர்கள் பெற்றுக்கொண்டனர். திமுக அமைச்சர் கே.என்.நேரு, கனிமொழி எம்.பி, விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி, நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தனர்.

-
மகாரஷ்டிரா, கோலாப்பூரின் நந்தினி மடத்தின் 36 வயது கோவில் யானையான ‘மகாதேவி (மதுரி)’, அம்பானியின் ‘வந்தாரா’ உயிரியல் பூங்காவிற்கு மாற்றப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
-
71வது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டன. சிறந்த தமிழ் திரைப்படம், சிறந்த திரைக்கதை என பார்கிங் திரைப்படம் இரண்டு விருதுகள் வென்றது. அந்த படத்துக்காக எம்.எஸ்.பாஸ்கர் சிறந்த துணை நடிகர் விருதை வென்றார். வாத்தி படத்துக்காக ஜி.வி.பிரகாஷ்குமார் சிறந்த இசையமைப்பாளர் (பாடல்) விருதைப் பெற்றார்.
-
தேசிய விருதுகளில், 12த் ஃபெயில் சிறந்த படமாக தேர்ந்தெடுக்கப்பட்டது. அதன் நாயகன் விக்ராந்த் மெஸ்ஸி மற்றும் ஷாரூக் கான் (ஜவான்) சிறந்த நடிகர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். உள்ளொழுக்கு திரைப்படத்துக்காக ஊர்வசி சிறந்த துணை நடிகை விருதுபெற்றார். ராணி முகர்ஜிக்கு சிறந்த நடிகை விருது வழங்கப்பட்டது.

-
‘வாக்காளர் சிறப்புத் திருத்தம்’ என்ற பெயரில் வடமாநிலத்தவரை தமிழ்நாட்டு வாக்காளராக்கும் இன உரிமை பறிப்பை ஒருபோதும் அனுமதிக்க முடியாது!” – என கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார் சீமான்.
-
நெல்லையில் இளைஞர் கவின் ஆணவக் கொலை சம்பவத்தில் தவெக தலைவர் விஜய் மௌனம் காப்பதாக விமர்சனங்கள் எழுந்த நிலையில், விஜய் உத்தரவின்பெயரில் தவெகவினர் மேற்கொண்ட பணிகள் ஆறுதல் கூறியது, கண்டன அறிக்கை வெளியிட்டது ஆகியவற்றைப் பட்டியலிட்டு தவெக கொள்கைப் பரப்பு இணைச் செயலாளர் ஆ.சம்பத்குமார் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
-
ஏற்கெனவே ஆகஸ்ட் 17ம் தேதி விழுப்புரத்தில் பாமக பொதுக்குழுக் கூட்டம் நடைபெறும் என ராமதாஸ் அறிவித்திருந்த நிலையில், ஆகஸ்ட் 9ம் தேதி மாமல்லபுரத்தில் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என அன்புமணி தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
-
தேசிய விருதுக்கு நன்றி தெரிவித்து ஜி.வி.பிரகாஷ், பார்கிங் இயக்குநர் ராம்குமார், நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் வீடியோ வெளியிட்டு மகிழ்ந்துள்ளனர்.