• August 1, 2025
  • NewsEditor
  • 0

ஸ்பெயினின் கிரனாடா மாகாணத்தில் உள்ள லஞ்சரோன் என்ற சிறிய நகரத்தில், 1999ஆம் ஆண்டு முதல் மரணிப்பது “சட்டவிரோதம்” என்ற வினோதமான விதி அமலில் உள்ளது.

அப்போதைய மேயர் ஜோஸ் ரூபியோ, நகரின் மயானத்தில் இடப்பற்றாக்குறை ஏற்பட்டதால், இந்த உத்தரவை பிறப்பித்திருக்கிறார்.

இந்த விதி அந்த நகரத்தின் மயானத்தில் அடக்கம் செய்வதற்கு இடமில்லாததால், புதிய மயானத்திற்கு நிலம் தேடுவதற்கு முன்னுரிமை அளிக்குமாறு குடியிருப்பாளர்களை வலியுறுத்துவதற்காக வெளியிடப்பட்டதாக கூறப்படுகிறது.

Granada

26 ஆண்டுகள் கடந்த பின்பும், லஞ்சரோனில் இன்னும் ஒரே ஒரு மயானம் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த மயான பிரச்சினை தீர்க்கப்பட்டதா என்பது குறித்து தெளிவாகத் தெரியவில்லை. இருப்பினும், இந்த வினோத விதி உலகளவில் கவனம் ஈர்த்துள்ளது.

4,000 மக்கள் வசிக்கும் இந்த நகரின் பொருளாதாரம், நீர் தொழில், விவசாயம் மற்றும் சுற்றுலாவை அடிப்படையாகக் கொண்டுள்ளது. பாதாம், ஒலிவ், திராட்சை ஆகியவை இங்கு உற்பத்தி செய்யப்படுகின்றன. உள்ளூர் ஒயின்கள் மற்றும் பன்றி இறைச்சி இங்கு பிரதான உணவுகளாக உள்ளன.

உலகில் வேறு எங்கும் மரண தடை?

லஞ்சரோன் மட்டுமல்ல, நார்வேயின் லாங்யியர்பியென் நகரமும் 1950 முதல் இதேபோன்ற மரண தடையை விதித்துள்ளது. அங்கு, ஆர்க்டிக் காலநிலையில் புதைக்கப்பட்ட உடல்கள் அழிவடையாமல் இருப்பது கண்டறியப்பட்டது.

உயிருள்ள மாதிரிகள் புதைக்கப்பட்ட உடல்களில் இருந்து எடுக்கப்பட்டன. இது நோய் பரவலை ஏற்படுத்தும் என்று அங்கும் அடக்கங்கள் தடை செய்யப்பட்டன.

லஞ்சரோனின் இந்த “மரண தடை” விதி, வினோதமாக இருந்தாலும், உலகளவில் இந்நகரத்திற்கு தனித்துவமான அடையாளத்தை அளித்துள்ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *