
சென்னை: சொத்து குவிப்பு வழக்கில், முன்னாள் அமைச்சர் செங்குட்டுவனின் மகன் உள்ளிட்ட நான்கு பேருக்கு விதிக்கப்பட்ட மூன்றாண்டுகள் சிறை தண்டனையை எதிர்த்த மேல் முறையீட்டு வழக்கில், வாதங்களை துவங்காததால், தண்டனையை நிறுத்தி வைத்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 1996 – 2001 ம் ஆண்டுகளில் திமுக ஆட்சி காலத்தில் மருங்காபுரி திமுக எம்.எல்.ஏ.வாகவும், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சராகவும் பதவி வகித்தவர், பி.எம்.செங்குட்டுவன். ஆட்சி மாற்றத்துக்குப் பின் அவர் அதிமுகவில் இணைந்தார்.