
சென்னை, வேப்பேரியைச் சேர்ந்த இளம் பெண்ணுக்குப் பாலியல் தொல்லை அளித்த குற்றச்சாட்டில் பைக் டாக்ஸி ஓட்டுநர் சம்பத் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 20 நாட்களுக்கு முன்பு, பாதிக்கப்பட்ட பெண் ஊபர் மூலம் பைக் டாக்ஸி புக் செய்தபோது, சம்பத் அறிமுகமாகி, தினமும் பணிக்கு அழைத்துச் செல்வதாக உறுதியளித்து நம்பிக்கை பெற்றுள்ளார்.
இந்நிலையில், நேற்று அப்பெண்ணிடம் அவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரின் பேரில், வேப்பேரி காவல்துறையினர் உடனடியாக விசாரணை மேற்கொண்டு, சம்பத்தைக் கைது செய்தனர். இச்சம்பவம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க காவல்துறை கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளது.