
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள ‘கூலி’ படத்துக்கு ‘ஏ’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இது, 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே காணத்தக்க படத்துக்கான தணிக்கைச் சான்றிதழாகும்.
தணிக்கைச் சான்றிதழ் கிடைத்துள்ள நிலையில், ‘கூலி’ படம் ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியாவது உறுதியாகி இருக்கிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் ரஜினி, நாகார்ஜுனா, உபேந்திரா, ஆமிர்கான், ஸ்ருதிஹாசன், சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளராக க்ரிஷ் கங்காதரன், இசையமைப்பாளராக அனிருத் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர். இப்படத்தினை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.