
புதுச்சேரி: புதுச்சேரி மாநிலம் முழுவதும் தங்கு தடையின்றி விற்பனை செய்யப்படும் வெளிமாநில போதை பொருட்கள் நடமாட்டத்தின் மீது புதுச்சேரி காவல் துறையினர் உரிய நடவடிக்கையை போர்க்கால அடிப்படையில் எடுக்க வேண்டும் என அதிமுக வலியுறுத்தியுள்ளது
புதுச்சேரி அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: "மக்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாக இருக்க வேண்டிய காவல் துறை நாளுக்கு நாள் மக்களின் நம்பிக்கையை இழந்து வருவது சரியானது அல்ல. இதற்குமேலும் சரியான நடவடிக்கையை காவல் துறையின் உயரதிகாரிகள் எடுக்கவில்லை என்றால் புதுச்சேரி மாநிலத்தில் ஏற்படும் சட்டம் – ஒழுங்கு சீர்குலைவை காப்பாற்ற யாராலும் முடியாது.