
சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வீண் விளம்பரங்கள், வெற்று நாடகங்களை நடத்துவதை விடுத்து குழந்தைகளும், பெண்களும் அச்சமின்றி சுதந்திரமாக நடமாடும் அளவுக்கு சட்டம் – ஒழுங்கை மேம்படுத்த வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை அடுத்த விஜிகே புரம் கிராமத்தைச் சேர்ந்த 8 வயது சிறுமி இயற்கையின் அழைப்புக்காக இரவில் வீட்டை விட்டு வெளியே வந்தபோது, அச்சிறுமியை ஒரு மனித மிருகம் முள்புதருக்குள் தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியும், கவலையும் அளிக்கின்றன.