
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர்
எனக்கும் ஆனந்த விகடனுக்குமான உறவு காதலர்களுக்கும் காதல் தெய்வம் குபிடுக்குமான உறவைபோன்றது. சிறுவயதில் இருந்தே எனக்கு சினிமா பிடிக்கும். சினிமாவை ரசிகனாக பார்த்த என்னை சினிமாவை காதலிக்க வைத்தது ஆனந்த விகடன் தான்.
எந்த சினிமா பின்புலமும் இல்லாமல் சினிமாவை கற்று சினிமாவில் சாதிக்க ஆசைப்படும் என்னைப்போன்ற பலருக்கு ஆனந்த விகடன் ஒரு ஆசான்.
சமுதாயத்தில் சாதித்த மனிதர்களை தேடி தேடிச்சென்று கவுரவிக்கும் ஆனந்த விகடனின் “டாப் 10 மனிதர்கள்” நம்பிக்கை விருதுகள் இனி வரும் காலங்களில் நாமும் சாதிக்கவேண்டும் என்று வாசகர் ஒவ்வொருவர் மனதிலும் விதைக்கும் நம்பிக்கை விதை.
சமுதாயத்தில் நடக்கும் குற்றத்தை யார் செய்தாலும், அவர் எந்த அதிகாரத்தில் இருந்தாலும் ஓவியம் மற்றும் கட்டுரை மூலம் அவர்களை கேள்வி கேட்க விகடன் ஒருபோதும் தவறியதில்லை.
ஆனந்த விகடனில் வரும் “சொல்வனம்” கவிதைகள் மற்றும் “சிறுகதைகள்” தவறாமல் படித்துவிடுவேன். சில நாட்களுக்கு முன் “கறிசோறு” என்ற தலைப்பில் பதிவான சிறுகதை என்னை மிகவும் பாதித்தது, கதையின் முடிவு ஆறுதல்.
திரைத்துறையில் லாபம் தந்த மசாலா படங்களை பார்க்காமல், சமுதாய அக்கறையோடு வெளிவந்த படைப்புகளையும், படைப்பாளர்களையும் “விகடன் சினிமா விருதுகள்” மூலமாக மேடை ஏற்றி கவுரவம் செய்வது சிறப்பு.
“ஸ்டார்ட் அப் ஸ்டார்ஸ்” கட்டுரையில் புதிதாக தனக்கு பிடித்த தொழிலை தொடங்கி சாதித்தவர்கள் பகிரும் “சக்ஸஸ் மந்திரம்” சுயமாக தொழில் தொடங்க விருப்பம் ஆனால் தோற்றுவிடுவோமோ என்ற பயத்தோடு இருப்பவர்களுக்கு பெரும் நம்பிக்கை, வழிகாட்டி.
ஒவ்வொரு வாரமும் ஒரு சிறந்த புத்தகத்தை நமக்கு அறிமுகம் செய்துவைக்கும் ஆனந்த விகடனில் வரும் “படிப்பறை” எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று.
சினிமாவில் கவர்ச்சியை மட்டுமே தன் அட்டை படத்தில் பதிவிட்டு வெளிவரும் படைப்புகளுக்கு மத்தியில் சினிமாவின் பெருமையையும், அழகையும், சாதனையையும் தன் அட்டை படத்தில் பதிவிட்டு சினிமாவிற்கு மகுடம் சூடும் ஒரே படைப்பு ஆனந்த விகடன் மட்டும் தான் என்று பெருமையாக சொல்வேன்.

விகடன் காலத்திற்க்கு ஏற்றாற்போல் தன்னை புதுப்பித்துக்கொண்டு டிரெண்டிங்கான “வலைபாயுதே”, “கப்ஸா டைம்ஸ்” போன்ற படைப்புகள் மூலம் ஜென் Z வாசகர்களுக்கும் பிடித்துவிட்டார்.
விகடன் உயர்ந்த படைப்புகளையும், சிறந்த படைப்பாளர்களையும் உருவாக்கி கவுரவிக்க ஒருபொழுதும் தவறியதில்லை.
நம்மை சுற்றி நடக்கும் அரசியலை புரிந்துகொள்ள “ஜூனியர் விகடன்”. சினிமாவை அறிந்துகொள்வதற்கு “ஆனந்த விகடன்”. விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த வியாபாரம் தெரிந்துகொள்ள “பசுமை விகடன்”. பொருளாதாரம், முதலீடு மற்றும் சேமிப்பைப்பற்றி தெரிந்துகொள்ள “நாணயம் விகடன்”. சாதிக்கும் மாதரை கவுரவம் செய்து, பெண்களுக்கு தன்னம்பிக்கை தரும் “அவள் விகடன்”. ஆன்மிக வாசகர்களுக்கு “சக்தி விகடன்” என்று நம் குடும்பத்தில் எல்லோருக்கும் விருப்பமான, நம்மில் ஒருவனாக இருக்கிறார் விகடன் தாத்தா.
விகடன் தன் படைப்புகள் வழியாக வாசகர்களை அறிவார்ந்தவர்களாக, சமுதாயத்தின் மீது அக்கறை கொண்டவர்களாக மாற்றி எழுத்து புரட்சி செய்து கொண்டிருக்கிறது.
100 ஆண்டு சாதனையை நெருங்கிக்கொண்டிருக்கும் விகடனுக்கு எனது மனமார்ந்த நன்றியும் வாழ்த்துக்களும்.
விகடன் இதழுடன் உங்களுக்கு இருக்கும் பந்தம் குறித்து எழுத ஓர் அரிய வாய்ப்பு!
ஏறக்குறைய 100 ஆண்டுகளாக, தமிழ் மக்களின் வாழ்வில் ஒரு நீங்காத அங்கமாக விகடன் திகழ்ந்து வருகிறது. பொழுதுபோக்கு, அரசியல், சமூகச் செய்திகள் எனப் பல தளங்களில் விகடன் வாசகர்களின் எண்ணங்களை வளப்படுத்தி வருகிறது. உங்கள் நினைவுகளிலும், வாழ்க்கைப் பயணத்திலும் விகடனின் பங்கு என்ன? விகடன் இதழ் உங்கள் குடும்பத்தில் ஒருவராய்ப் பார்க்கப்பட்ட தருணங்கள் உண்டா? ஒரு செய்தியோ, ஒரு கட்டுரையோ, ஒரு புகைப்படமோ உங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்திய தாக்கம் என்ன?
இப்படியான உங்கள் அனுபவங்களை “விகடனும் நானும்” என்ற தலைப்பில் கட்டுரையாக எழுதி அனுப்பலாம். கட்டுரையின் தரத்தின் அடிப்படையில் வெற்றியாளர்கள் விகடன் நடுவர் குழுவால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
-
கட்டுரையின் நீளம் 500 முதல் 800 வார்த்தைகளுக்குள் இருக்க வேண்டும்.
-
உங்கள் கட்டுரைகளை my@vikatan.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்.
