• August 1, 2025
  • NewsEditor
  • 0

தொலைக்காட்சி தொகுப்பாளராக தனது பயணத்தைத் தொடங்கி, சீரியல், சினிமா என பல தளங்களில் தோன்றி நம்மை என்டர்டெயின் செய்தவர் நடிகை அகிலா.

அன்று ‘கோலங்கள்’ சீரியலில் தொடங்கி இன்று ‘அபியும் நானும்’, ‘மலர்’ எனத் தொடர்ந்து ஒய்வின்றி சீரியல்களில் மிளிர்ந்து வருகிறார்.

Serial Actress Akila

இது மட்டும் கிடையாது, இப்போது சமூக வலைதளப் பக்கங்களிலும் அகிலா பயங்கர ஆக்டிவ்!

தற்போது கர்ப்பமாக இருக்கும் அவரைச் சந்தித்துப் பேட்டி கண்டோம்.

உற்சாகத்துடன் வெளிப்படையாக பல விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார்.

நடிகை அகிலா பேசுகையில், “இந்த நேரத்துல குழந்தை வேணும்னு ஃபீல் பண்ணினேன். உடனடியாக கடவுளும் ஆசீர்வாதமாகக் கொடுத்துட்டார்.

இப்படியான நேரத்தில் அனைத்து விஷயங்களுமே சரியாக அமைஞ்சது. இப்போ சீரியல், சினிமானு எந்த ப்ராஜெக்டும் கமிட் பண்ணல. 22 வருட மீடியா வாழ்க்கையில் பரபரப்பாக இயங்கிட்டேன்.

இப்போ இந்த பயணத்தையும் மகிழ்ச்சியாகக் கொண்டாடணும்னு விரும்புறேன். எனக்கு நிறைய நண்பர்கள் இருக்காங்க.

Serial Actress Akila
Serial Actress Akila

அவங்களை நண்பர்கள்னு மட்டும் சுருக்கிட முடியாது. என்னுடைய குடும்பத்துலையும் அவங்க ஒருத்தர்தான்.

என் சமூக வலைதளப் பக்கத்தைப் பார்த்திருந்தால் உங்களுக்குமே அந்த விஷயம் புரிந்திருக்கும். அப்படியான நண்பர்கள் என்னை நல்லபடியாகக் கவனிச்சுக்கிறாங்க.

தினந்தோறும் ஒவ்வொரு நபரும் எனக்கு வளைகாப்பு நடத்திக்கிட்டே இருக்காங்க (மென்மையாகச் சிரித்துக்கொண்டே…).

அபியும் நானும்’ சீரியலோட இயக்குநர் ஜவஹர் சாருமே, ‘தாய் மாமனாக என்னை எப்போ சீர் செய்ய வைப்ப’னு கேட்டுட்டே இருப்பார். 5-வது மாசத்துல அவரும் வந்து வளைகாப்பு செய்திருந்தார்.

சொல்லப்போனால், அந்த நேரத்துல உரிமையாக வந்து ‘நான்தான் வளையல் போடுவேன்’ னு சொல்லி சீர் செய்து கொண்டாடினாரு. ‘கோலங்கள்’ சீரியலில் எனக்கு அம்மாவாக வந்த பாரதி அம்மாவும் வந்து சீர் செய்தாங்க.

இப்படி லிஸ்ட் பெருசா போயிட்டே இருக்கும். இதுல இன்னொரு முக்கியமான நபரும் இருக்காங்க. எனக்கு 27 வயசுல ஒரு பொண்ணு இருக்காங்க. ஆமா, (புன்னகையுடன்) என் பொண்ணு பெயர் அஸ்வதி.

‘மலர்’ சீரியலில் கதாநாயகியாக அவங்க நடித்திருப்பாங்க.” என்றவர், “இப்போ நடக்குற அனைத்துக் கொண்டாட்டங்களையும் நான் பொக்கிஷமாகப் பாதுகாத்துட்டு வர்றேன்.

அதையெல்லாம் என் சமூக வலைதளப் பக்கப் பதிவுகளுக்காகச் சேமித்து வைக்கல. என்னுடைய பர்சனல் நினைவுகளுக்காக அத்தனையும் பத்திரமாகப் பாதுகாத்துட்டு வர்றேன்.” எனப் பகிர்ந்திருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *