
சென்னை: ‘தனியார் பேருந்து உரிமையாளர்களின் ஒற்றை கோரிக்கை காலம் கனியும்போது நிறைவேற்றப்படும்’ என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தெரிவித்தார்.
சென்னை, நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில், அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் சார்பில், ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பயணிகள் வாகன கண்காட்சியை போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் நேற்று தொடங்கி வைத்தார்.