
இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளரான சஹாலுக்கு கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் 22ம் தேதி குர்கானில் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது.
விவாகரத்து
நடிகை, நடன இயக்குநர், யூ-டியூபர் மற்றும் பல் மருத்துவர் என பல பரிமாணங்கள் கொண்ட இன்ஸ்டாகிராம் பிரபலம் தனஸ்ரீ வர்மா என்பவரைத்தான் சஹால் திருமணம் செய்து கொண்டார். இதனிடையே சஹால் மற்றும் தனஶ்ரீ இருவரும் கடந்த பிப்ரவரி 5ம் தேதி குடும்ப நல நீதிமன்றத்தில் பரஸ்பர சம்மதத்துடன் விவாகரத்து பெற மனு தாக்கல் செய்தனர்.
நீதிமன்றம், விவாகரத்துக்கான ஒப்புதல் விதிமுறைகளுடன் சஹல், தனஶ்ரீக்கு ரூ.4.75 கோடி ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டது. சாஹலும் இதற்கு ஒத்துக்கொண்டார். இருவருக்கும் மும்பை குடும்ப நீதிமன்றம் விவாகரத்தும் வழங்கியது.
தினமும் இரண்டு மணிநேரம் நான் அழுவேன்
இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் சாஹல் பேசியது வைரலாகி இருக்கிறது. “நான் பலமுறை தற்கொலை செய்து கொள்ளலாம் என்று முடிவு எடுத்தேன். தினமும் இரண்டு மணிநேரம் நான் அழுவேன். ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரம் தான் என்னால் தூங்க முடியும். இதே போல் ஒரு 40- 45 நாள் எனக்கு இருந்தது. கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு எடுத்துக் கொள்ளலாம் என்று நினைத்தேன்.

ஆனால் தொடர்ந்து கிரிக்கெட்டில் விளையாடி வந்தேன். என்னால் பழையபடி கவனம் செலுத்த முடியவில்லை. என் நண்பர்களுடன் நான் தற்கொலை செய்து கொள்ளும் முடிவை கூறுவேன். அவர்கள் எனக்கு உறுதுணையாக நின்றார்கள். நான் வாழ்க்கையை நினைத்து மிகவும் பயந்தேன். என் மனைவியை நான் விவாகரத்து செய்த போது மக்கள் பலர் நான் அவரை ஏமாற்றியதாக கூறினார்கள். நான் யாரையும் இதுவரை ஏமாற்றியது கிடையாது. நான் அப்படிப்பட்ட மனிதனும் இல்லை. என்னைவிட ஒரு விசுவாசம் உள்ள நபரை பார்க்க முடியாது.
என் மீது பழியை போட்டார்கள்!
என்னுடைய நெருங்கிய நண்பர்களிடம் நான் இதயத்திலிருந்து அன்பை செலுத்துவேன். நான் எதையும் எதிர்பார்க்க மாட்டேன். பலருக்கு நான் தான் வழங்குவேன். என்னைப் பற்றி தெரியாதவர்கள் தான் இந்த விவகாரத்தில் என் மீது பழியை போட்டார்கள். எனக்கு இரண்டு தங்கைகள் இருக்கின்றார்கள். அவர்களோடு தான் நான் சிறுவயதிலிருந்து வளர்ந்தேன்.

பெண்களை எப்படி மதிப்பது என்று எனக்கு நன்றாக தெரியும். அப்படித்தான் என்னுடைய பெற்றோர்கள் எனக்கு சொல்லிக் கொடுத்திருக்கின்றார்கள். என்னுடைய பெயர் பல விஷயங்களில் தொடர்பு படுத்தி பேசப்படுகிறது. என்னை பற்றி எழுதினால் நிறைய பார்வையாளர்கள் படிப்பார்கள் என்பதால் சிலர் அவ்வாறு செய்கிறார்கள்” என்று சாஹல் எமோஷனலாகப் பேசியிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…