
புதுடெல்லி: கூட்டுறவு, ரயில்வே உள்ளிட்ட பல முக்கிய திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் வழங்கியது. அதன் படி, தேசிய கூட்டுறவு மேம்பாட்டு கழகத்திற்கு (என்சிடிசி) நான்கு ஆண்டுகளுக்கு ரூ.2,000 கோடி மானிய உதவி வழங்க பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
கடன் வழங்கல் நடவடிக்கைகளுக்கு இது மிகவும் உதவியாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 29 கோடி உறுப்பினர்களைக் கொண்ட 8.25 லட்சத்துக்கும் அதிகமான கூட்டுறவுகளுக்கு என்சிடிசி கடன்களை வழங்குகிறது.