
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் முன்பும் மாடவீதிகளிலும் ரீல்ஸ் எடுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திருப்பதி தேவஸ்தானம் எச்சரித்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயில் முன்னும், மாட வீதிகளிலும் மேலும் சில முக்கிய இடங்களிலும் திருமலைக்கு வரும் சிலர் தங்களின் மொபைல் போனில் ரீல்ஸ் எடுத்து அவற்றை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.
இது சமீப காலமாக அதிகரித்துள்ளது. புண்ணிய திருத்தலமாக விளங்கும் ஏழுமலையான் கோயிலில் இதுபோன்றவர்களின் ரீல்ஸ் மோகத்தால் பக்தர்களின் மனம் புண்படுகிறது. ஆதலால் திருமலையில் ரீல்ஸ் எடுப்பவர்கள் மீது இனி வழக்குப் பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் இதனை புரிந்து நடந்து கொள்ளவேண்டும் என திருப்பதி தேவஸ்தானம் கேட்டுக்கொண்டுள்ளது.