
ஏ. ஆர். ரஹ்மான் எப்போதும் பயணங்களை அதிகமாக விரும்புவார். தற்போது அவர் அமெரிக்காவில் இருக்கிறார். அங்கு முக்கியமான பிரபலங்கள் சிலரையும் சந்தித்து வருகிறார். சமீபத்தில்கூட ‘ஓப்பன் ஏஐ’-யின் சி.இ.ஒ சாம் ஆல்ட்மேனை சந்தித்திருந்தார்.
அது குறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில், “சாம் ஆல்ட்மேனை அவரது அலுவலகத்தில் சந்தித்தது மகிழ்ச்சியாக இருந்தது.
நாங்கள் எங்கள் உலகளாவிய மெய்நிகர் இசைக் குழுவான ‘Secret Mountain’ பற்றியும், சவால்களை எதிர்கொள்ள AI கருவிகளைப் பயன்படுத்தி முன்னேற வழிவகுப்பது பற்றியும் விவாதித்தோம்.” எனப் பதிவிட்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து ‘பெர்ப்பிளெக்ஸிட்டி ஏஐ’-யின் சி.இ.ஒ அரவிந்த் ஸ்ரீனிவாசனையும் சந்தித்திருக்கிறார்.
இந்த சந்திப்புக் குறித்து அரவிந்த் ஸ்ரீனிவாஸ், “எங்கள் அலுவலகத்திற்கு ஏ.ஆர். ரஹ்மானை வரவேற்றது மிகவும் மகிழ்ச்சியளித்தது. அவருடைய ‘Secret Mountain’ ப்ராஜெக்ட் பற்றியும் நாங்கள் அருமையான உரையாடலை மேற்கொண்டோம்.” எனப் பதிவிட்டிருந்தார்.
தற்போது பிரபல பின்னணிப் பாடகர் யேசுதாஸை அமெரிக்காவில் உள்ள டல்லாஸில் சந்தித்திருக்கிறார்.

யேசுதாஸை சந்தித்தது குறித்து ஏ. ஆர். ரஹ்மான், “என் குழந்தைப் பருவத்தின் ஃபேவரைட்டான யேசுதாஸ் அவர்களை டல்லாஸில் அவரின் இடத்தில் சந்தித்தேன்.
அவரது ஆராய்ச்சிப் பணியும், இந்திய பாரம்பரிய (கர்நாடக) இசை மீதான அன்பும் ஆச்சரியமளித்தது!” எனக் குறிப்பிட்டுப் பதிவிட்டிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…