
விருதுநகர்: தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் விருதுநகரில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: திமுக அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. மாறாக, விளைநிலங்களை கார்ப்பரேட்டுகளுக்கு தாரை வார்க்க முயற்சிக்கிறது.
நிலத்தை தர மறுக்கும் விவசாயிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்கிறது. தமிழகத்தின் நீராதார உரிமைகள் பறிபோகின்றன. விவசாயிகளுக்கு எதிராக திமுக அரசு செயல்படுவதை கண்டித்து டிசம்பர் மாதம் குமரி முதல் சென்னை வரை பிரச்சாரப் பயணம் மேற்கொள்ள உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.