• August 1, 2025
  • NewsEditor
  • 0

தூத்துக்குடி / சென்னை: ​சா​தி, மதம் பெய​ரால் நடக்​கும் கொலைகளைத் தடுக்க தனி சட்​டம் அவசி​யம் என்று விடு​தலை சிறுத்​தைகள் கட்​சித் தலை​வர் திரு​மாவளவன் கூறி​னார். நெல்​லை​யில் காதல் விவ​காரத்​தில் கொலை செய்​யப்​பட்ட கவின் செல்வகணேஷ் குடும்​பத்​தினரை, தூத்​துக்​குடி மாவட்​டம் ஆறு​முகமங்​கலத்​தில் உள்ள அவர்​களது வீட்​டுக்கு திரு​மாவளவன் நேற்று சென்று சந்​தித்​தார்.

கவின் செல்​வகணேஷ் குடும்​பத்​தினருக்கு ஆறு​தல் கூறிய அவர், பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: கவின் கொலை​யில் வேறு யாரும் சம்​பந்​தப்​பட்​டிருக்​கிறார்​களா என்​பது தொடர்​பாக விசா​ரிக்க வேண்​டும். சுர்​ஜித் ஆத்​திரப்​பட்டு இக்​கொலை​யைச் செய்​ய​வில்​லை. கவினோடு நெருக்​க​மாக உறவாடி இருக்​கிறார். அந்த நம்​பிக்​கை​யின் அடிப்​படை​யில்​தான் அவர் அழைத்​தது​மே, அவரோடு கவின் போயிருக்​கிறார். நீண்​ட​கால​மாக திட்​ட​மிட்​டுத்​தான் இந்த கொலை நடந்​திருக்​கிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *