• August 1, 2025
  • NewsEditor
  • 0

உசுரே (தமிழ்)

உசுரே

நவீன் டி. கோபால் இயக்கத்தில் டி ஜே அருணாச்சலம், ஜனனி குணசீலன், ராசி, மனோகர், கதிர் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகியிருக்கும் திரைப்படம் ‘உசுரே’. கிராமத்துக் காதல் கதையான இது இந்த ஆகஸ்ட் 1ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

Housemates (தமிழ்)

Housemates

டி.ராஜவேல் இயக்கத்தில் தர்ஷன், காளி வெங்கட், KPY தீனா, வினோதினி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Housemates’. ஜாலியான பேன்டஸி ஹாரர் திரைப்படமான இது இந்த ஆகஸ்ட் 1ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

சரண்டர் (தமிழ்)

சரண்டர் (தமிழ்)

கெளதம் கணபதி இயக்கத்தில் தர்ஷன் தியாகராஜா, லால், சுஜித் ஷங்கர், மன்சூர் அலிகான் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சரண்டர்’. போலீஸ் ஆக்‌ஷன் திரில்லர் திரைப்படமான இது இந்த ஆகஸ்ட் 1ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

Mr. Zoo Keeper (தமிழ்)

Mr. Zoo Keeper

சுரேஷ் இயக்கத்தில் புகழ், ஷிரின், சிங்கம் புலி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Mr. Zoo Keeper’. உயிரியல் பூங்கா பாதுகாவலரின் காமெடி, அட்வன்சர் நிறைந்த இத்திரைப்படம் இன்று (ஆகஸ்ட் 1) திரையரங்குகளில் வெளியாகிறது.

முதல் பக்கம் (தமிழ்)

முதல் பக்கம் (தமிழ்)

அனிஷ் அஷ்ரஃப் இயக்கத்தில் வெற்றி, ஷில்பா, நயானா, மகேஷ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘முதல் பக்கம்’. ஆக்‌ஷன் திரில்லர் திரைப்படமான இது இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.

அக்யூஸ்ட் (தமிழ்)

அக்யூஸ்ட்

பிரபு ஶ்ரீனிவாசன் இயக்கத்தில் அஜ்மல், யோகி பாபு, உதயா, ஜான்விகா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அக்யூஸ்ட்’. க்ரைம் திரில்லர் திரைப்படமான இது இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.

போகி (தமிழ்)

Bhoghee movie

விஜய சேகரன் இயக்கத்தில் நபி நந்தி, ஸ்வஸ்திகா, வேலா ராமமூர்த்தி, எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘போகி’. தங்கையை டாக்டர் ஆக்க வேண்டும் என்று சென்னைக்கு அனுப்புகிறார் அவரது அண்ணன். ஆனால், அங்கு வரும் பிரச்னைகள் அவர்களது வாழ்க்கையே மாற்றுகிறது. ஆக்‌ஷன் திரில்லர் நிறைந்த இத்திரைப்படம் இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகிறது.

Meesha (மலையாளம், தமிழ்)

Meesha

எம்சி ஜோசப் இயக்கத்தில் கதிர், சைன் டாம் சாக்கோ, ஜியோ பேபி, ஹக்கிம் ஷா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Meesha’. நண்பர் அழைப்பில் விருத்திற்காக காட்டுக்குள் செல்லும் கதிர் அவரது கூட்டாளிகளுக்கு என்ன ஆனது என்ற சஸ்பன்ஸ் திரில்லர் திரைப்படமான இது இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.

Sumathi Valavu (மலையாளம்)

Sumathi Valavu

விஷ்ணு சசி ஷங்கர் இயக்கத்தில் அர்ஜுன் அஷோகன், சைஜு குருப், கோபி, முகேஷ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Sumathi Valavu’. காமெடி, ஹாரர் திரில்லர் திரைப்படமான இது இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.

Kingdom (தமிழ்)

Kingdom

‘ஜெர்சி’ படத்தை இயக்கி கவனம் பெற்றார் கவுதம் தின்னனூர் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, சத்யதேவ், பாக்யஶ்ரீ போஸ், வெங்கடேஷ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘கிங்கடம்’. ஆக்‌ஷன், திரில்லர் திரைப்படமான இது இந்த ஆகஸ்ட் 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

Dhadak 2 (இந்தி)

Dhadak 2

ஷாஜியா இக்பால் இயக்கத்தில் சித்தாந்த் சதுர்வேதி, திரிப்தி திம்ரி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Dhadak 2’. காதல் திரைப்படமான இது இந்த ஆகஸ்ட் 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

Son of Sardaar 2 (தமிழ்)

Son of Sardaar 2

விஜயகுமார் அரோரா இயக்கத்தில் அஜய்தேவ்கன், மிருனாள் தாகூர், ரவிகிஷான் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Son of Sardaar’. பஞ்சாப்பில் வீட்டுக் கைதியாக மாட்டிக் கொள்ளும் குடும்பத்தின் காமெடி திரைப்படமான இது ஆகஸ்ட் 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

The Bad Guys 2 (ஆங்கிலம்)

The Bad Guys 2

பியர் பெரிஃபெல் இயக்கத்தில் சாம் ராக்வெல், கிரெய்க் ராபின்சன், அந்தோணி ராமோஸ் உள்ளிட்டோர் பங்களிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘The Bad Guys 2’. ஜாலியான காமெடி, அனிமேஷன் திரைப்படமான இது ஆகஸ்ட் 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

The Naked Gun (ஆங்கிலம்)

The Naked Gun

அகிவா ஷாஃபர் இயக்கத்தில் லியாம் நீசன், பமீலா ஆண்டர்சன், பால் வால்டர் ஹவுசர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ஹாலிவுட் திரைப்படம் ‘The Naked Gun’. காமெடி, ஆக்‌ஷன் திரில்லர் திரைப்படமான இது ஆகஸ்ட் 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *