• July 31, 2025
  • NewsEditor
  • 0

திருநெல்வேலியில் பட்டியலினத்தைச் சேர்ந்த கவின் என்பவரை, காவல்துறை அதிகாரிகளான சரவணன் – கிருஷ்ணவேணி தம்பதியினரின் மகனும். கவினின் காதலியின் சகோதரருமான சுர்ஜித் ஜூலை 27-ம் தேதி கொடூரமாக ஆணவக்கொலை செய்த சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியிருக்கிறது.

இந்த விவகாரத்தில், அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ஆணவக்கொலைக்கெதிராக தனிச் சட்டம் கொண்டுவர வேண்டும் என்றும் கோரிக்கைகள் வலுத்துவருகின்றன.

இந்த நிலையில், கவினின் காதலி தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

கவின் குமார்

அந்த வீடியோவில், “எனக்கும் கவினுக்கும் என்ன இருந்தது என்று எங்கள் இருவருக்கு மட்டும்தான் தெரியும். எங்கள் ரிலேஷன்ஷிப் பற்றி யாரும் தவறாகப் பேச வேண்டாம்.

உண்மை தெரியாமல் யாரும் எதுவும் பேச வேண்டாம். எங்கள் அப்பா அம்மாவுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.

அவர்களைத் தண்டிக்க வேண்டும் என்று நினைப்பது தவறு. அவர்களை விட்டு விடுங்கள். இந்த சூழ்நிலையில் எல்லோரும் அவரவருக்கு என்ன தெரியுமோ அதைப் பேசிவிட்டீர்கள்.

நானும் கவினும் உண்மையாகக் காதலித்தோம். நாங்கள் செட்டிலாக கொஞ்சம் டைம் தேவைப்பட்டது.

மே 30-ம் தேதி சுர்ஜித்தும் கவினும் பேசிக் கொண்டார்கள். அப்போது சுர்ஜித் அப்பாவிடம் கூறிவிட்டான். அப்பா என்னிடம் கேட்டபோது நான் காதலிக்கவில்லை என்று சொல்லிவிட்டேன்.

ஏனெனில் கவின் என்னிடம், இன்னும் ஒரு ஆறு மாதம் கழித்து சொல் என்று டைம் கேட்டிருந்தான்.

அதனால அப்பா கிட்ட நான் சொல்லல. அதுக்குள்ள இப்போ இப்படி ஆயிடுச்சு.

ரெண்டு பேருக்குள்ள என்ன உரையாடல் நடந்தது என்று தெளிவாகத் தெரியாது.

கவினின் காதலி
கவினின் காதலி

சுர்ஜித் கவினுக்கு போன் பண்ணி, `பொண்ணு கேக்க வாங்க, அப்பதான் என்னோட ப்ரொவெஷன் நான் பார்க்க முடியும்’ என்று சொன்னான். அது எனக்கு கண்டிப்பா தெரியும்.

27-ம் தேதி கவின் வருகிறான் என்று எனக்கு தெரியாது. 28-ம் தேதி ஈவினிங் தான் அவங்கள நான் வர சொல்லி இருந்தேன். மதியம் (27-ம் தேதி) வந்தப்போ தான் எனக்கு தெரியும் வந்திருக்காங்கன்னு.

நேரா அவங்கள நான் கூட்டிட்டு போயிட்டேன். அன்னைக்கு கவின் அம்மா, மாமா கிட்டதான் நான் பேசினேன்.

அப்படியே கவின் வெளியே போயிட்டான். அவங்களோட அம்மாவும் மாமாவும் கிளம்புறப்பதான் கவின் எங்கே என்று நாங்கள் யோசித்தோம். அவங்க அம்மா கால் பண்ணி கிடைக்கல, நானும் கால் பண்ணி எடுக்கல.

அவங்க அம்மா பசிக்குதுன்னு சொன்னாங்க அதனால சாப்பிட சொல்லி இருந்தேன். அதுக்குள்ள இப்படி ஆயிடுச்சு.

இதில் யாரும் தேவையில்லாமல் வதந்திகளைக் கிளப்ப வேண்டாம். உங்களுக்கு தோணறது எல்லாத்தையும் நீங்க பேசாதீங்க. எங்க அப்பா அம்மாக்கு எதுவும் தெரியாது. நீங்க இதை விட்ருங்க” என்று கூறியிருக்கிறார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *