• July 31, 2025
  • NewsEditor
  • 0

ஜூலை 31 – டாப் செய்திகள்!

* திருநெல்வேலி கவின்குமார் ஆணவக்கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் அவரின் காதலி, தாங்கள் இருவரும் உண்மையாகக் காதலித்ததாகவும், தங்களின் ரிலேஷன்ஷிப் பற்றி யாரும் தவறாகப் பேச வேண்டாம் என்றும் இன்று வீடியோ வெளியிட்டார்.

* அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தராக வேல்ராஜ் பதவி வகித்த காலத்தில் முறைகேடுகள் நடந்தாகக் குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், வேல்ராஜ் பணியிலிருந்து ஓய்வுபெறும் நாளான இன்று சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

* மத்தியப் பிரதேசத்தில் கடந்த ஒன்றரை ஆண்டில் 23,000-க்கும் மேற்பட்ட பெண்கள் காணாமல் போயிருப்பதாக அம்மாநில பாஜக அரசு சட்டமன்றத்தில் தகவல்.

* முறையான பட்டப்படிப்பு இல்லையென்றாலும் பாரம்பர்ய குருகுலங்களில் படித்தவர்கள் ஐஐடி போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் அரசு உதவித்தொகையுடன் சேர்வதற்கு மத்திய கல்வி அமைச்சகம் திட்டமிட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

* பாஜக கூட்டணியிலிருந்து இன்று விலகிய ஓ. பன்னீர்செல்வம் நிலையில், முதல்வர் ஸ்டாலினுடனான சந்திப்புக்குப் பின்னர் கூட்டணி குறித்து “தேர்தல் நெருங்குகின்ற நேரத்தில் எதுவும் நடக்கலாம்” என்று கூறினார்.

* சென்னையில் மின்சா​ரப் பேருந்​துகள் மூலம் எரிபொருள் செலவு ரூ.90 லட்​சம் சேமிக்​கப்​பட்​டிருப்பதாக மாநகர் போக்குவரத்துக் கழகம் தெரிவித்திருக்கிறது.

* மருத்துவ ரீதியாக தகுதி இழக்கும் போக்குவரத்துக் கழக தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு கருணை அடிப்படையில் வேலை வாய்ப்பு வழங்காதது ஏன் என்பது குறித்து தமிழ்நாடு போக்குவரத்துத் துறை விளக்கமளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

* முதல்வர் ஸ்டாலினை இன்று காலை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்த தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், குடும்ப நட்பு ரீதியாக ஸ்டாலினின் உடல் நலம் குறித்து விசாரித்ததாகவும், கூட்டணி குறித்து நேரம் வரும்போது சொல்வோம் என்று தெரிவித்தார்.

* ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் 50 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில், 1 ஜிகாபைட் திறன் கொண்ட டேட்டா சென்டரை அமைக்க கூகுள் நிறுவனம் திட்டம்.

* சவுதி அரேபியாவின் தைஃப் நகரில் உள்ள கிரீன் மவுண்டன் பூங்காவில் ‘360 டிகிரி’ எனப்படும் ராட்சத ராட்டினத்தின் மையத் தூண் இன்று திடீரென உடைந்து விழுந்ததில் 26 பேர் காயமடைந்தனர்.

* இங்கிலாந்து vs இந்தியா நடப்பு டெஸ்ட் தொடரில் இன்று தொடங்கிய கடைசி போட்டியில் இந்திய அணியில் பும்ரா, ஷர்துல் தாக்கூர், அன்ஷுல் காம்போஜ, பண்ட் ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டு, கருண் நாயர், துருவ் ஜோரல், ஆகாஷ் தீப், பிரசித்தி கிருஷ்ணா ஆகியோருக்கு வாய்ப்பளிக்கப்பட்டது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *