• July 31, 2025
  • NewsEditor
  • 0

சவுதி அரேபியாவின் தைஃப் நகரில் உள்ள கிரீன் மவுண்டன் பூங்காவில் இன்று கோர விபத்து நடந்துள்ளது.

‘360 டிகிரி’ எனப்படும் ராட்சத ராட்டினத்தின் மையத் தூண் இயக்கத்தின்போது திடீரென உடைந்து விழுந்ததில் 26 பேர் காயமடைந்தனர். இவர்களில் மூவர் மிகவும் பலத்த காயமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளனர்.

இந்த விபத்து வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. வைரலாகும் வீடியோவின் படி ராட்சத ராட்டினத்தின் மையத் தூண் இரண்டாக உடைவதையும், அப்போது அதில் இருந்த மக்கள் கூச்சலிடுவதையும் காணமுடிந்தது.

திடீரென ஒரு பெரும் சத்தத்துடன் ராட்டினத்தின் மையப்பகுதி உடைந்து, பயணிகள் இருக்கைகளில் இருக்கும்போதே அது தரையில் விழுந்தது.

உடனடியாக மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, பாதிக்கப்பட்டவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இந்த விபத்திற்கான காரணத்தை கண்டறிய விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

இதேபோன்ற ஒரு விபத்து இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் டெல்லியில் உள்ள ஃபன் என் ஃபுட் வாட்டர் பார்க்கில் நிகழ்ந்தது. அங்கு ரோலர் கோஸ்டர் விபத்தில் 24 வயது பெண் ஒருவர் உயிரிழந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *