
சென்னை: உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி அரசு திட்டத்தில் முதல்வரின் பெயரை பயன்படுத்தலாம் என சென்னை உயர் நீதிமன்றத்தில் விளக்கம் அளித்த நிலையில், ஆகஸ்ட் 2 ஆம் தேதி தொடங்கவுள்ள `நலம் காக்கும் ஸ்டாலின்’ என்ற மருத்துவ திட்டத்துக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.
அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சிவி சண்முகம் மற்றும் சென்னையை சேர்ந்த அதிமுக வழக்கறிஞர் இனியன் ஆகியோர், சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித்தனியே பொது நல மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். அதில், ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் தொடர்பாக வெளியிடப்பட்ட விளம்பரத்தில் அரசு முத்திரை இடம்பெற்றுள்ள நிலையில், அதில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் புகைப்படமும், மு.க.ஸ்டாலினின் புகைப்படமும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்றும் இது உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு முரணானது எனவும் தெரிவித்துள்ளனர்.