
புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தவிர்த்த மற்ற அனைவருக்கும் இந்திய பொருளாதாரம் உயிரற்றது என்பது தெரியும் என்று ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, இந்தியாவும் ரஷ்யாவும் உயிரற்ற பொருளாதாரங்கள் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விமர்சித்திருப்பது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த ராகுல் காந்தி, "அவர் சொன்னது சரியானதுதான். பிரதமர், நிதி அமைச்சர் தவிர அனைவருக்கும் இது தெரியும். இந்திய பொருளாதாரம் உயிரற்ற பொருளாதாரம் என்பது அனைவருக்கும் தெரியும். அதிபர் ட்ரம்ப் உண்மையைச் சொன்னதற்காக நான் மகிழ்ச்சியடைகிறேன்.