
50 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் ஆசியாவிலேயே மிகப்பெரிய டேட்டா சென்டரை (Data center.) ஆந்திராவில் அமைக்க கூகுள் நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது.
ஆந்திர பிரதேச மாநிலம், விசாகப்பட்டினத்தில் 6 பில்லியன் டாலர் அதாவது இந்திய மதிப்புப்படி 50 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில், 1 ஜிகாபைட் திறன் கொண்ட தரவு மையத்தை (data center) கூகுள் நிறுவனம் அமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்தியாவில் இவ்வளவு பெரியத் தொகையை கூகுள் நிறுவனம் முதலீடு செய்வது இதுவே முதல் முறை. மேலும், ஆசியாவில் இவ்வளவு பெரிய தரவு மையம், அதிக செலவில் கட்டப்படுவதும் இதுவே முதல் முறை.
இந்த தரவு மையத்திற்கு மின்சாரம் வழங்க, சூரிய சக்தி மற்றும் காற்றாலை மின்சாரம் ஆகியவற்றிற்கு மட்டுமே 2 பில்லியன் டாலர் செலவிடப்படும் என்று கூறப்படுகிறது. இந்தியாவில் டிஜிட்டல் சேவைகள் வேகமாக வளர்ந்து வருகின்றன.

இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள கூகுள் இந்த முதலீட்டைச் செய்கிறது. நேற்று முன்தினம் சிங்கப்பூரில் நடைபெற்ற வணிக வட்டமேசை மாநாட்டில் ஆந்திர அமைச்சர் நாரா லோகேஷ், கூகுள் கிளவுட் இயக்குநர் ட்ரூ பெய்ன்ஸை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…