• July 31, 2025
  • NewsEditor
  • 0

சமீபத்தில் த.வெ.க உறுப்பினர் சேர்க்கைக்கான புதிய செயலியை அறிமுகம் செய்த விஜய், “1967 மற்றும் 1977 ஆகிய அந்த இரண்டு மாபெரும் தேர்தல்களில் ஏற்கெனவே தொடர்ந்து ஜெயித்துக் கொண்டிருந்த அதிகார பலம், அசுர பலம் அனைத்தையும் எதிர்த்து நின்றுதான் புதிதாக வந்தவர்கள் ஜெயித்தனர்.

தமிழக அரசியலில் இதற்கு முன்னால் நடந்த மிகப்பெரிய இரண்டு தேர்தல்களைப் போல 2026 தேர்தல் முடிவுகளும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது.” என்று பேசியிருந்தார்.

விஜய்

1967 மற்றும் 1977 தேர்தல்கள்

1967ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் அதுவரை இருந்த காங்கிரஸ் கட்சி ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்து பேரறிஞர் அண்ணா தலைமையிலான தி.மு.க ஆட்சி அமைத்தது. அதுதான் திராவிட ஆட்சியின் தொடக்கமாக வரலாற்றில் பெரும் திருப்பு முனையாக அமைந்தது.

1967ம் ஆண்டு எம்.ஜி.ஆர் தி.மு.கவிலிருந்து பிரிந்து ‘அ.தி.மு.க’ வை ஆரம்பித்து மாபெரும் வெற்றியைப் பெற்றார்.

இந்த இரண்டு பெரும் அரசியல் ஆட்சி மாற்றத்தைக் குறிபிட்டுத்தான், ‘த.வெ.க’வும் 2026 ஆட்சி மாற்றத்தை செய்யும் என விஜய் பேசியிருந்தார்.

திருமா

இதுகுறித்துப் பேசியிருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், “1967 மற்றும் 1977 தேர்தல்களில் நடந்த ஆட்சி மாற்றங்களின் போது தமிழ்நாட்டின் களநிலவரம் வேறு, இன்றைய களநிலவரம் வேறு. எவ்வளவோ அரசியல் மாற்றத்தையும் சமூக மாற்றத்தையும் பெற்றுவிட்டது தமிழ்நாடு.

எம்.ஜி.ஆர் போல நடிகராக இருந்து, அரசியலில் வெற்றிபெறலாம் எனப் பல நடிகர்கள் முயற்சி செய்தார்கள். ஆனால், அவர்கள் எல்லாம் மக்களால் ஏற்றுக் கொள்ளப்படாமல் தடுமாறி வெளியேறிய சம்பவங்கள் இங்கே நிறைய நடந்துவிட்டன. தமிழ்நாடு மக்கள் அரசியல் விழிப்புணர்வு பெற்றுவிட்டனர். இனியும் சினிமா செல்வாக்கை வைத்து அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்ற நினைப்பது நடக்காது. விஜய் நினைப்பதைப் போல் இல்லை. தமிழ்நாடு அரசியல் களம் மாறிவிட்டது.” என்று பேசியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *