• July 31, 2025
  • NewsEditor
  • 0

‘F1’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தன்னுடைய அடுத்தத் திரைப்படத்தின் பணிகளில் இறங்கிவிட்டார் பிராட் பிட்.

Cliff Booth – Once Upon a time in Hollywood

குவென்டின் டாரன்டினோவின் (Quentin Tarantino) ‘ஒன்ஸ் அபான் எ டைம் இன் ஹாலிவுட் (Once Upon a Time in Hollywood)’ திரைப்படத்தின் கிளிஃப் பூத் (Cliff Booth) கதாபாத்திரத்தின் ஸ்பின் ஆஃப் திரைப்படமான ‘தி அட்வென்ச்சர் ஆஃப் கிளிஃப் பூத்’ படத்தில்தான் பிராட் பிட் நடிக்கவிருக்கிறார்.

2019-ம் ஆண்டு குவென்டின் டாரன்டினோவின் ‘ஒன்ஸ் அபான் எ டைம் இன் ஹாலிவுட்’ திரைப்படம் வெளிவந்திருந்தது.

டாரன்டினோ அதன் பிறகு ‘ஒன்ஸ் அபான் எ டைம் இன் ஹாலிவுட்’ படத்தின் கதையை விரிவுபடுத்தி நாவலாக 2021-ம் ஆண்டு எழுதத் தொடங்கினார்.

அதனைத் தொடர்ந்து, ‘தி அட்வென்ச்சர் ஆஃப் கிளிஃப் பூத்’ திரைப்படத்திற்கு திரைக்கதையையும் எழுதினார்.

இப்படத்தை ‘ஃபைட் கிளப்’, ‘செவன்’ போன்ற படங்களை இயக்கிய டேவிட் ஃபின்சர் இயக்கவுள்ளார் என்ற செய்தி எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கிறது.

Brad Pitt - F1 Movie
Brad Pitt – F1 Movie

ஹாலிவுட்டின் இரண்டு முக்கியமானவர்கள் இப்படத்திற்காக ஒன்றிணைவது உலகமெங்கும் பெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கியிருக்கிறது.

இத்திரைப்படம் நடிகர் பிராட் பிட், இயக்குநர் டேவிட் ஃபின்சர் கூட்டணி இணையும் மூன்றாவது திரைப்படம்.

1970-களில் நடக்கும் கதைக்களம் என்பதால் படத்திற்காக பிரத்தியேகமாக கலிஃபோர்னியாவில் செட்டும் அமைத்திருக்கிறார்கள்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *