• July 31, 2025
  • NewsEditor
  • 0

நெல்லையில் ஆணவப்படுகொலை செய்யப்பட்ட கவினின் குடும்பத்தை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்திருக்கிறார் விசிக தலைவர் தொல். திருமாவளவன்.

கவின் ஆணவப்படுகொலை தொடர்பாக பேசியிருக்கும் விசிக தலைவர் திருமாவளவன், “கவின் ஆணவப்படுகொலையில் சுர்ஜித்தை மட்டும் வைத்து வழக்கை முடிக்க முயற்சிக்கிறார்கள். இந்த ஆணவப்படுகொலையில் சுர்ஜித்தோடு நேரடியாகவோ, மறைமுகமாகவோ தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சுர்ஜித்தின் பெற்றோர்கள் இதில் சம்பந்தப்பட்டுள்ளதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. FIR-ல் அவர்கள் பெயர் இருக்கிறது. அப்படி இருக்கையில் அவர்களைக் கைது செய்வதில் காவல்துறைக்கு என்ன தயக்கம் இருக்கிறது என்பதுதான் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

விஜய்

தனிச்சட்டம் வேண்டும்

மதவாத, சாதியவாத சக்திகள் சாதிப் பெருமையைப் பரப்புவதால் ஏற்படும் விளைவுகள்தான் இதுபோன்ற ஆணவப்படுகொலைகள். பட்டியல் சாதியினர் மட்டுமல்ல, அனைத்து சாதிகளிலும் இந்த ஆணவப்படுகொலைகள் நடக்கின்றன.

தமிழ்நாடு அரசு கண்டுகொள்ளவில்லை

தேசிய அளவில் ஆணவப்படுகொலைகளுக்கு எதிராக தனிச்சட்டம் கொண்டு வரவேண்டும் என இந்தியாவின் அனைத்து மாநில ஜனநாயக சக்திகளும் குரல் கொடுத்து வருகிறோம். அதன் அடிப்படையில் இச்சட்டத்தை இயற்றலாமா என மாநில அரசுகளின் கருத்தை ஒன்றிய அரசு கேட்டு கடிதம் எழுதியிருக்கிறார்கள். அதற்கு எந்தவொரு மாநில அரசும் ஆதரவாக பதிலளிக்கவில்லை.

திருமா

தமிழ்நாடு அரசுகூட பின்பற்றுவதில்லை

உச்ச நீதிமன்றம் ஆணவப்படுகொலைகள் தொடர்பாக, ‘எப்படி வழக்குப் பதிவு செய்ய வேண்டும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு என்ன இழப்பீடுகள் தர வேண்டும், காவல்துறை அதிகாரிகளின் உடனடி கடமைகள் என்ன?’ என்பது குறித்த சில வழிகாட்டுதல்களைத் தந்திருக்கிறார்கள். உச்ச நீதிமன்றதன் இந்த வழிகாட்டுதல்களைக்கூட தமிழ்நாடு உள்ளிட்ட எந்த மாநில அரசு சரியாகப் பின்பற்றுவதில்லை என்பது வருத்தமளிக்கிறது.

அமித் ஷா சந்திப்பு

இதுதொடர்பாக நேற்று (ஜூலை 30) உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்திக்க முயற்சி செய்தோம். ஆனால் அவரை சந்திக்க முடியவில்லை. உள்துறை அலுவலகத்தில் ஆணவப்படுகொலைகளுக்கு எதிராக தனிச்சட்டத்தை உடனடியாக இயற்ற வேண்டும் என்ற கோரிக்கை மனுவை அளித்திருக்கிறோம்” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *