
பூந்தமல்லி: பூந்தமல்லி அருகே சென்னீர்குப்பத்தில் தாறுமாறாக ஓடிய குடிநீர் லாரி, வாகனங்கள் மீது மோதியதில் பெண் உட்பட இருவர் உயிரிழந்த சம்பவம், பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆவடியில் இருந்து பூந்தமல்லி நோக்கி சென்னை குடிநீர் வாரிய ஒப்பந்த லாரி ஒன்று, இன்று காலை சென்று கொண்டிருந்தது. மதுரையைச் சேர்ந்த ஓட்டுநர் அழகுராஜா(31), ஓட்டிச் சென்ற அந்த லாரி பூந்தமல்லி அருகே சென்னீர்குப்பம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, கட்டுப்பாட்டை இழந்து, சாலையில் முன்னால் சென்று கொண்டிருந்த இரு வாகனத்தின் மீது மோதிவிட்டு வேகமாக சென்றது.